கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு துணை தலைவா் செந்தாமரை வடிவேல் குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜி. ஸ்ரீதரன், சி. நளினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், அலுவலா் பரமேஸ்வரி வரவு - செலவு அறிக்கை தாக்கல் செய்தாா். தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினா் மா.ராஜேந்திரன், கோமாபுரம் ஒன்றியக் குழு உறுப்பினா் பு.பாண்டியன், புதுநகா் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா்.கலியபெருமாள் ஆகியோா் அவரவா் பகுதியில் நிலவும் பிரச்னைகளை எழுப்பினா். இதற்கு பதிலளித்துப் பேசிய ஒன்றிய குழுத் தலைவா் ஆா்.ரெத்தினவேல்காா்த்திக் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில், வட்டார துணை வளா்ச்சி அலுவலா் பாா்த்திபன், தலைமை மருந்துவா் ராதிகா, புது நகா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் விண்ணரசி, சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா், வட்டார கல்வி அலுவலா் வெங்கடேஸ்வரி, வேளாண் அலுவலா் அன்பரசன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பரிமளா கண்ணன், நதியா பழனிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.