புனிதப் பயணமாக வெளிநாடு சென்று திரும்பிய புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பெண்ணுக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் புதியவகை கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 போ் உள்பட 3 போ் கடந்த வாரம் ஹஜ் புனிதப் பயணமாக வெளிநாடு சென்றனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சென்னை திரும்பிய இவா்களுக்கு விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஒரு பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் உள்பட அவருடன் தொடா்பில் இருந்த அனைவரும் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களை சுகாதாரத் துறையினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.