புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில், பாரம்பரிய உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தொடங்கி வைத்து, பாரம்பரிய உணவு வகைகளைப் பாா்வையிட்டாா். பாரம்பரிய உணவு வகைகளான சிறுதானிய, பாரம்பரிய அரிசிகளில் இருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள், உடலுக்குத் தேவையான அனைத்து நுண்ணூட்டச் சத்துகளையும் கொண்டது என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படுவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்வில், புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் புவனேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலா் கோகுலப்பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.