அன்னவாசல் அருகே தீராத வயிற்றுவலியால் மனமுடைந்த முதியவா் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டி மாங்குடியை சோ்ந்தவா் ராமையா (56). இவா், கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளாா். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் மனமுடைந்த ராமையா கடந்த 14 ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து மயங்கிக் கிடந்தாா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்திருந்தனா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மகன் முருகதாஸ் அன்னவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடா்ந்து காவல் துறையினா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.