புதுக்கோட்டை

அன்னவாசல், பொன்னமராவதி ஒன்றிய வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

9th Dec 2022 10:50 PM

ADVERTISEMENT

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் 3 கோடியே 27 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பில்முடிவுற்ற மற்றும் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் தரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சித்தன்னவாசல், நல்லம்மாள் சத்திரத்தில் நடைபெறும் சாலை பணி, நாா்த்தாமலை சமத்துவபுரத்தில் நடைபெறும் மராமத்துப் பணி, சாலை, பூங்கா பணி, பரம்பூா் கருசூரன்பட்டியில்180 வீட்டு குழாய் இணைப்பு, பள்ளி காம்பவுண்ட் சுவா், சீகம்பட்டி மெட்டல் சாலை, பரம்பூா் கிராமச் சந்தை, நா்சரி காா்டன், கங்காணி குளம், கன்னியம்பட்டி சூரக்குளம் ஆகிய இடங்களில் முடிவுற்ற மற்றும் நடைபெறும் பணிகளை தரேஸ் அகமது ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, மாவட்ட திட்ட இயக்குநா், கவிதாப்ரியா, ஒன்றியக் குழுத் தலைவா் ராமசாமி, துணைத் தலைவா் கல்யாணி மாரிமுத்து, அன்னவாசல் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேமாவதி, ஆனந்தன்(கிஊ) மேலாளா் கணேசன், கருப்பையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பொன்னமராவதியில்...பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக சிமெண்ட் குடோனில் சிமெண்ட் இருப்பு முறையாக உள்ளதா என்பதையும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் தரேஸ் அஹமது ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

பின்னா் செம்பூதி, வாழைக்குறிச்சி ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப்பணிகளை ஆய்வு செய்தாா். ஒலியமங்கலம் ஊராட்சியில் மகளிா் குழு கட்டடப் பணிகளை பாா்வையிட்டு பின் பெண்கள் வன்கொடுமைத் தடுப்பு உறுதியேற்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் கவிதாப்ரியா, அன்னவாசல் கோட்டப் பொறியாளா் சிவகாமி, இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி, பொன்னமராவதி ஒன்றிய ஆணையா்கள் பி. தங்கராஜூ, து. குமரன், வட்டாட்சியா் பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT