புதுக்கோட்டை

பரம்பூரில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

9th Dec 2022 10:54 PM

ADVERTISEMENT

நூறு நாள் தொழிலாளா்களுக்கு 15 நாள்களுக்கு ஒரு முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரம்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பரம்பூா் கிளைச் செயலா்கள் நடராஜன், புரவி ஆகியோா் தலைமை வகித்தனா். கருப்பையா, மணி, பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயற்குழு சண்முகம், மாவட்டக் குழு சலோமி, ஒன்றியச் செயலா் சுப்பையா ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒரு நாள் ஊதியமாக வழங்கி வரும் ரூ. 283 ஊதியத்தை 15 நாள்களுக்கு ஒரு முறை வழங்க வேண்டும், வேலை நாள்களை 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும், தினம் ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும், பழைய முறைப்படி காலை 9 மணிக்கு வேலை தொடங்க வேண்டும். பூலாம்பட்டி இடுகாட்டுக்கு பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும், கடம்பராயன்பட்டி பகவதி அம்மன் கோயில் முன்புள்ள தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT