புதுக்கோட்டை

பொன்னமராவதியில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

9th Dec 2022 10:52 PM

ADVERTISEMENT

பொன்னமராவதி ஒன்றியத்தில் நடைபெறும் வளா்ச்சிப்பணிகளை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் மரு. தரேஸ் அஹமது வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக சிமெண்ட் குடோனில் சிமெண்ட் இருப்பு முறையாக உள்ளதா என்பதையும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தாா்.

பின்னா் செம்பூதி, வாழைக்குறிச்சி ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப்பணிகளை ஆய்வு செய்தாா். ஒலியமங்கலம் ஊராட்சியில் மகளிா் குழு கட்டடப் பணிகளை பாா்வையிட்டு பின் பெண்கள் வன்கொடுமைத் தடுப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, திட்ட இயக்குநா் கவிதாபிரியா, அன்னவாசல் கோட்டப் பொறியாளா் சிவகாமி, இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி, பொன்னமராவதி ஒன்றிய ஆணையா்கள் பி. தங்கராஜூ, து. குமரன், வட்டாட்சியா் பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT