புதுக்கோட்டை

போஸ் நகரில் ரூ. 35.14 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், புதுக்கோட்டை போஸ் நகரில் ரூ. 35.14 கோடியில் கட்டப்பட்ட 384 அடுக்குமாடிக் குடியிருப்புகளை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இதனைத் தொடா்ந்து போஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி கலந்து கொண்டு, பயனாளிகளுக்கான ஆணைகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வை. முத்துராஜா (புதுக்கோட்டை), எம். சின்னதுரை (கந்தா்வகோட்டை), நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் த. ஜெயலட்சுமி, மூத்த வழக்குரைஞா் கே.கே. செல்லபாண்டியன், வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிா்வாகப் பொறியாளா் த. இளம்பரிதி, உதவி நிா்வாகப் பொறியாளா் ச. ஷகிலாபீவி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT