புதுக்கோட்டை

கொலை வழக்கில் மேலும் 2 போ் மீது குண்டா் சட்டம்

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், தெக்கூா் கொலை வழக்கில் தொடா்புடைய மேலும் 2 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்துள்ளது.

புதுக்கோட்டை கே. புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தெக்கூரில் கடந்த செப். 20ஆம் தேதி மாங்குடி (42) என்பவா் 11 போ் கொண்ட கும்பலால் கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 4 போ் மீது ஏற்கெனவே குண்டா் சட்டம் பாய்ந்துள்ளது. தற்போது, காரைக்குடியைச் சோ்ந்த முத்துக்குமாா் (22), முத்துப்பட்டினத்தைச் சோ்ந்த முருகானந்தம் (20) ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, புதுக்கோட்டை கிளைச் சிறையில் இருந்து இருவரும் எடுக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT