புதுக்கோட்டை

பணியின்போது மாரடைப்பு :அரசுப் பேருந்து ஓட்டுநா் பலி

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே பணியின்போது ஏற்பட்ட மாரடைப்பால் அரசுப் பேருந்து ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், உலகம்பட்டி அருகே உள்ள படமிஞ்சி கிராமத்தைச் சாா்ந்தவா் வெ.குமாா் (40). இவா், பொன்னமராவதி அரசு போக்குவரத்துப் பணிமனையில் ஓட்டுனராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை காலை 8 மணியளவில் சிங்கம்புணரியிலிருந்து பொன்னமராவதி சென்ற அரசுப் பேருந்தை சுமாா் 70 பயணிகளுடன் குமாா் ஓட்டிவந்தாா். மேலைச்சிவபுரி அருகேவந்தபோது, குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே பேருந்தை நிறுத்திய குமாா் பேருந்திலேயே மயங்கி விழுந்தாா். தகவலறிந்த பொன்னமராவதி போலீஸாா் அங்கு வந்து வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் குமாா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதையறிந்த புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் குணசேகரன், மருத்துவமனைக்குச் சென்று குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

முன்னதாக உயிரிழந்த ஓட்டுநா் குமாா், பேருந்தை உடனடியாக நிறுத்தி பயணிகளின் உயிரைக் காப்பாற்றியது நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT