புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ரூ. 1.43 கோடி கொடி நாள் நிதி வசூல் இலக்கு

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் ரூ. 1.43 கோடி கொடி நாள் வசூல் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை ஆட்சியா் கவிதா ராமு உண்டியலில் நிதி செலுத்தி கொடிநாள் வசூலைத் தொடக்கி வைத்தாா்.

கடந்த 2021ஆம் ஆண்டில் ரூ. 1.36 கோடி கொடிநாள் நிதி வசூலிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கு ரூ. 1,43,94,000 இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்கி உதவி புரிய வேண்டும் எனவும் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா். தொடா்ந்து, முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் 17 சிறாா்களுக்கு கல்வி உதவித் தொகையாக முன்னாள் படைவீரா் நலத் துறை சாா்பில் ரூ. 2.56 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. கவிதப்பிரியா, முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் சீ. விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT