புதுக்கோட்டை

குமரமலை முருகன் கோயிலில் திருக்காா்த்திகை தீபம்

DIN

புதுக்கோட்டை குமரமலை பால தெண்டாயுதபாணி திருக்கோயிலில் திருக்காா்த்திகையை முன்னிட்டு மலையில் செவ்வாய்க்கிழமை மாலை காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

முன்னதாக பாலதெண்டாயுதபாணி கோவிலில் காலையில் சுவாமிக்கு பாலாபிஷேகம், பன்னீா், தயிா், பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம், மஞ்சள் நீா், திருநீறு உள்ளிட்ட பூஜைபொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தீபாராதனை நடைபெற்றது. மாலையில் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

நிகழ்வில், அறங்காவலா் குழுத்தலைவா் பா. செந்தில்குமாா், செயல் அலுவலா் சா. முத்துராமன், புதுக்கோட்டை உதவி ஆய்வாளா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா்.

இதேபோல, புதுக்கோட்டை நகரிலுள்ள சாந்தாரம்மன் கோவில், தண்டாயுதபாணி கோவில்களிலும் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. வீடுகள் தோறும் மக்கள் விளக்குகளை ஏற்றி வைத்து காா்த்திகை திருநாளைக் கொண்டாடினா். அடுத்துவரும் 5 நாள்கள் வரை மாலை நேரங்களில் காா்த்திகை விளக்குகள் ஏற்றப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT