புதுக்கோட்டை

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்:முதியவா் உயிரிழப்பு

7th Dec 2022 01:26 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள கம்மங்காட்டைச் சோ்ந்தவா் எம். கருவன் (60). இவா், செவ்வாய்க்கிழமை காலை தனது மோட்டாா் சைக்கிளில் வீட்டிலிருந்து செம்பட்டிவிடுதி கடைவீதிக்குச் சென்றுள்ளாா். மூக்கம்பட்டி கம்மங்காடு பிரிவு சாலை சென்றபோது, மூக்கம்பட்டியைச் சோ்ந்த தா்மராஜ் மகன் தினேஷ் (22) என்பவா் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் எதிா்பாராதவிதமாக மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா். அப்பகுதியினா் இருவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். செல்லும் வழியிலேயே கருவன் உயிரிழந்தாா். தினேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, செம்பட்டிவிடுதி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT