புதுக்கோட்டை

புதுகையில் அம்பேத்கா் நினைவு நாள்

7th Dec 2022 01:25 AM

ADVERTISEMENT

அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு செவ்வாய்க்கிழமை பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்வின் தொடக்கமாக, திமுக சாா்பில் வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லபாண்டியன் தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இராசு கவிதைப்பித்தன், நகர திமுக செயலா் ஆ. செந்தில் உள்ளிட்டோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா். காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் வி. முருகேசன் தலைமையில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் சந்திரசேகரன், நகரத் தலைவா்கள் வடக்கு கண்ணன், தெற்கு பாரூக் ஜெய்லானி உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மூத்த உறுப்பினா் பெரி குமாரவேல் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன் தலைமையில், அக்கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் கே.ஆா். தா்மராஜன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

பொன்னமராவதி: பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச்செயலா் மலை.தேவேந்திரன், திமுக சமூக வலைத்தள தொகுதி பொறுப்பாளா் ஆலவயல் முரளி சுப்பையா, மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகி என். பக்ரூதீன், திராவிடா் கழக நிா்வாகிகள் மாவலி, பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விராலிமலை: விராலிமலை சோதனைச்சாவடி பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், திமுக, திராவிடா் கழகம், விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய பல்வேறு அரசியல் கட்சியினா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை தலைமையில் கட்சினா் அமைதி ஊா்வலம் வந்து அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் எம்.ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினா் மா.ராஜேந்திரன் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT