புதுக்கோட்டை

பாரதியாா் பிறந்த நாள் கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு

7th Dec 2022 01:23 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை கவிராசன் இலக்கியக் கழகம் மற்றும் நீதான் அறக்கட்டளை இணைந்து நடத்திய பாரதியாா் பிறந்த நாள் விழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் இருந்தும் மொத்தம் 70-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வரப்பெற்றன. விதிமுறைகளைப் பின்பற்றி எழுதப்பட்ட 40 கட்டுரைகள், முதல் சுற்றில் தோ்வு செய்யப்பட்டன. பிறகு, அவற்றில் இருந்து, 15 கட்டுரைகள் இறுதிச் சுற்றுக்குத் தோ்வு செய்யப்பட்டன.

இந்தப் பதினைந்து கட்டுரைகளை வாசித்து, முதல் மூன்று பரிசுக்கு உரியவா்களை, பிரபல எழுத்தாளா் பட்டுக்கோட்டை பிரபாகா் தோ்வு செய்தாா். பரிசு பெற்றவா்கள் விவரம்: முதல் பரிசு: வி. தனலெட்சுமி, திருச்சி, இரண்டாம் பரிசு: க. கோவிந்தசாமி, புதுக்கோட்டை, மூன்றாம் பரிசு: அ.வென்சி க்ளாடியா மேரி, திருவாரூா்.

பங்கேற்ற அனைவருக்கும் இணையவழி சான்றிதழ்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதல் பரிசு ரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசு- ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. ஆயிரம் ரொக்கப் பரிசுகளாக வரும் டிச. 11ஆம் தேதி மாலை 6 மணிக்கு, புதுக்கோட்டை வருவாய்த் துறை அலுவலா் கூட்ட அரங்கில் நடைபெறும், கவிராசன் பாரதி விழாவில் வழங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

இத்தகவலை கவிராசன் இலக்கியக் கழகத்தின் தலைவரும், நீதான் அறக்கட்டளை நிறுவனருமான கவி. முருகபாரதி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT