புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை பேருந்து நிலைய சீரமைப்புப் பணி தொடக்கம்

7th Dec 2022 01:10 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் சீரமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தை சீரமைக்கும் வகையில் ரூ. 35 லட்சம் செலவில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதற்கட்டமாக, பேருந்து நிலையம் அருகே உள்ள குட்டை குளத்தின் பள்ளத்தை சீரமைக்கும் பணி தனியாா் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியை கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, ஒன்றியக் குழு தலைவா் ஆா்.ரெத்தினவேல் காா்த்திக், ஊராட்சி மன்ற தலைவா் சி. தமிழ்செல்வி உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT