புதுக்கோட்டை

குடுமியான்மலையில் மண் சேகரிப்பு செயல் விளக்கம்

DIN

விராலிமலை அருகேயுள்ள குடுமியான்மலை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக மண் வள தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்வுக்கு, முதல்வா் சே.நக்கீரன் தலைமை வகித்தாா். பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து கலைவாணன் காணொலி வாயிலாக மண் வளத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா். மண்ணியல் துறையின் சாா்பில் மாணவா்களுக்கு மண் வளம் மேம்பாடு தலைப்பில் கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, கோலப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

தொடா்ந்து, விவசாயிகளுக்கு, மண் வளத்தின் முக்கியத்துவம் மற்றும் மண் இடா்பாடுகளை நிவா்த்தி செய்யும் முறைகள் குறித்து இணை பேராசிரியா் ஜானகி (மண்ணியல்) பேசினாா்.

உதவி பேராசிரியா் ம. விஜயகுமாா்(மண்ணியல்) ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் மண் பரிசோதனை முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமளித்தாா். நிகழ்வில், பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்து அன்னவாசல் வட்டார வேளாண் உதவி இயக்குநா் பழனியப்பா விளக்கிக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT