புதுக்கோட்டை

அடிப்படை வசதி கோரி உசிலங்குளத்தில் ஆா்ப்பாட்டம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட உசிலங்குளம் சத்தியமூா்த்தி நகா், கேஎல்கேஎஸ் நகா் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், உசிலங்குளம் கடைவீதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் உசிலங்குளம் கிளை செயலா் ஏ. டேவிட் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டச்செயற்குழு உறுப்பினா் எஸ். ஜனாா்த்தனன், நகரச் செயலா் ஆா். சோலையப்பன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், உசிலங்குளம், சத்தியமூா்த்தி நகா் பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை முறையாக விநியோகம் செய்ய வேண்டும். புதை சாக்கடையில் கழிவு நீா் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உசிலங்குளம் 8ஆம் வீதியில் தெருவிளக்கு அமைத்து தர வேண்டும். உசிலங்குளத்தில் ரேசன் கடைக்கு நிரந்தரமான ஓா் இடத்தை தோ்வு செய்து கட்டடம் கட்டித் தர வேண்டும். கேஎல்கேஎஸ் நகரில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பூங்கா அமைத்துத்தரவேண்டும். மழைநீா் தேங்காமல் வரத்து வாரிகளை சரிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT