புதுக்கோட்டை

வெம்மணியில் உலக மண்வள தினம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

விராலிமலை வட்டாரத்துக்குள்பட்ட வெம்மணியில் உலக மண் வள தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், ரசாயன உரங்களை தவிா்த்து இயற்கை உரங்கள் பயன்படுத்துவதன் மூலம் எதிா்கால சந்ததிக்கு நஞ்சில்லா உணவு வழங்கலாம் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் இயற்கை முறையில் பண்ணையம் செய்ய உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். தொடா்ந்து, கருத்துக் கண்காட்சி, பேரணி, மண்வள தின ரங்கோலி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்வில், விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநா் தமிழ்ச்செல்வி இயற்கை விவசாயம் குறித்து விளக்க உரையாற்றினாா். மத்திய கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண் அலுவலா் செல்லத்தாய், மண் மாதிரி குறித்து விளக்கமளித்தாா். வட்டார வேளாண் அலுவலா் ஷீலா ராணி கருத்துக் கண்காட்சி பற்றி கூறினாா். துணை வேளாண் அலுவலா் தங்கராசு வரவேற்றாா்.

ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா் ஷாலினி பா்கானா பேகம், உதவி தோட்டக்கலை அலுவலா் பெலிக்ஸ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளா் பாண்டியன் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT