புதுக்கோட்டை

புதுக்கோட்டை விடுதியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை விடுதியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை விடுதியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாமை தொடக்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை பாா்வையிட்டு, அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் சிறந்த கால்நடை வளா்ப்பவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா். தொடா்ந்து, அரசடிப்பட்டியில், 21,513 கால்நடைகள் பயன்பெறும் வகையில், ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தைத் திறந்து வைத்து அமைச்சா் பேசியது:

கால்நடை பராமரிப்புத்துறையின் சாா்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் ஒரு ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் மொத்தம் 260 முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இந்த சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாமில், நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல் என பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகளுக்கு வழங்கப்படவுள்ளது என்றாா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநா் சம்பத், கோட்டாட்சியா் முருகேசன், வட்டாட்சியா் செந்தில்நாயகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT