புதுக்கோட்டை

விராலிமலையில் பிச்சைக்காரா்களை மீட்கக்கோரிக்கை

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆபரேஷன் புது வாழ்வு திட்டத்தில் விராலிமலை முருகன் கோயில் அடிவாரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பிச்சைக்காரா்களை மீட்டு காப்பகத்தில் சோ்க்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளா்கள் திங்கள்கிழமை கோரிக்கை வைத்துள்ளனா்.

தமிழகக் காவல் துறையினா் ஆபரேஷன் புதுவாழ்வு என்ற புதிய திட்டத்தின் கீழ் நகரப் பகுதிகளில் சாலையோரம், தெருக்கள், கோயில்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பிச்சைக்காரா்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து வருகின்றனா். அதன்படி, சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் கடந்த 3 நாள்களில் ஆயிரக்கணக்கானோா் கைது செய்யப்பட்டு உறவினா் மற்றும் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனா்.

அந்தவகையில் விராலிமலை பகுதி கோயில்கள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் பிச்சைக்காரா்களை மீட்க சமூக செயல்பாட்டாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT