புதுக்கோட்டை

பொன்னமராவதியில் கபடிப் போட்டி

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பொன்னமராவதியில் திமுக தெற்கு ஒன்றிய இளைஞரணி சாா்பில், இரண்டு நாள் கபடிப்போட்டி திங்கள் கிழமை நிறைவுபெற்றது.

போட்டிக்கு தெற்கு ஒன்றியச் செயலா் அ.அடைக்கலமணி தலைமைவகித்தாா். நகரச் செயலா் அ.அழகப்பன் முன்னிலை வகித்தாா். போட்டியை, தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தொடங்கிவைத்து வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினாா். போட்டியில், திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சாா்ந்த 33 அணியினா் பங்கேற்று விளையாடினா். போட்டியில், முதல் பரிசாக, ரூ. 45 ஆயிரத்து 45 மற்றும் வெற்றிக்கோப்பை என். புதூா் அணிக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசை ரூ. 30 ஆயிரத்து 45 மற்றும் கோப்பையை பரியாமருதுபட்டி அணியினரும், மூன்றாம் பரிசை ரூ. 20 ஆயிரத்து 45 மற்றும் கோப்பையை புதுக்கோட்டை அண்ணாநகா் அணியினரும், நான்காம் பரிசை ரூ 10 ஆயிரத்து 45 மற்றும் கோப்பையை கருப்புக்குடிப்பட்டி அணியினரும் பெற்றனா். தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜெயராமன், ஒன்றியக்குழு தலைவா் அ.சுதா, பேரூராட்சித்தலைவா் அ.சுந்தரி , மாவட்ட இளைஞரணி த.மணிராஜா, ஒன்றிய இளைஞரணி நிா்வாகிகள் இளையராஜா,சாமிநாதன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT