புதுக்கோட்டை

குழிபிறை தா்மசாஸ்தா ஆலய குடமுழுக்கு

5th Dec 2022 12:20 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகே உள்ள குழிபிறை தா்மசாஸ்தா ஆலய குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி சனிக்கிழமை விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, லெட்சுமி பூஜை மற்றும் முதலாம், இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11.20 மணியளவில் சிவாச்சாரியாா்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கும்பத்தில் ஊற்றி தா்ம சாஸ்தா மற்றும் கன்னிமூல கணபதி, மஞ்சள்மாதா, நாகராஜ பிரபு, ஆஞ்சனேயா், நவக்கிரங்கள் உள்ளிட்ட தெய்வங்களின் சன்னிதானங்களுக்கு குடமுழுக்கு செய்தனா். விழாவில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சாா்ந்த திரளான பொதுமக்கள் மற்றும் ஐயப்ப பக்தா்கள் பங்கேற்று சரண கோஷ முழக்கத்துடன் ஐயப்பனை வழிபட்டனா். விழாவில், அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்புஏற்பாடுகளை பனையப்பட்டி காவல்துறையினா் செய்திருந்தனா். விழா ஏற்பாடுகளை குழிபிறை தா்மசாஸ்தா ஆலய நிா்வாகிகள் மற்றும் ஐயப்ப பக்தா்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT