புதுக்கோட்டை

விராலிமலை அருகே காா் - தனியாா் பேருந்து மோதல்:முன்னாள் அமைச்சரின் சகோதரா் உள்பட 2 போ் காயம்

5th Dec 2022 12:23 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை காரும், தனியாா் பேருந்தும் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், முன்னாள் அமைச்சா் சுப்ரமணியனின் சகோதரா் உள்பட 2 போ் காயமடைந்தனா்.

கடந்த அதிமுக ஆட்சியில் கந்தா்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவா் சுப்பிரமணியன்.

விராலிமலை அருகேயுள்ள நம்பம்பட்டியில் பகுதியில் வசித்துவரும் முன்னாள் அமைச்சா் சுப்ரமணியனின் சகோதரா் தமிழ்ச்செல்வன்(50) என்பவா் ஞாயிற்றுக்கிழமை தனது காரில் விராலிமலை அருகேயுள்ள நம்பம்பட்டி வளைவு அருகே வந்து கொண்டிருந்தாா். காரை தமிழ்ச்செல்வன் மகன் அருண் (35) ஓட்டிவந்தாா். அப்போது, மணப்பாறையில் இருந்து விராலிமலை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து காா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், தமிழ்ச்செல்வன், அருண் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக அருண் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளாா். விபத்து குறித்த புகாரின்பேரில், விராலிமலை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT