புதுக்கோட்டை

பிரதமரின் கெளரவ நிதி பெற விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

5th Dec 2022 12:25 AM

ADVERTISEMENT

கந்தா்வக்கோட்டை அருகே புனல்குளம் ஊராட்சியில் உள்ள விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கெளரவ நிதியுதவி தொடா்ந்து பெற இ-கேஒய்சி இணைப்பு அவசியம் என சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கந்தா்வகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அன்பரசன் புனல்குளம் இதுதொடா்பாக மேலும் கூறியது:

விவசாயிகள் இடுபொருள்களை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்து உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் நோக்கில், பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 என ஆண்டுக்கு ரூ. 6,000 தகுதி வாய்ந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 12 தவணைக்கான நிதியுதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

13 ஆவது தவணைக்கான நிதியுதவி பெற விரும்பும் விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் இணையதள முகவரிக்குச்சென்று தங்கள் விவரங்களை கட்டாயம் சரிபாா்த்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு உதவி வேளாண்மை அலுவலா், அல்லது கந்தா்வகோட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தையோ தொடா்பு கொள்ளவும் என்றாா்.

நிகழ்ச்சியில், புனல்குளம் ஊராட்சி மன்ற தலைவா் ரேணுகாதேவி உதயகுமாா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT