விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு விராலிமலை ஊராட்சி மன்ற தலைவா் ரவி தலைமை வகித்தாா். சுந்தரம் குருக்கள் முன்னிலை வகித்தாா். இதில், மாா்கழி 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் குத்துவிளக்கு பூஜை நடத்துவது, மாா்கழி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை குத்துவிளக்கு பூஜை நடத்துவது, ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் பூஜைவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிறைவில், சுந்தரம் நன்றி கூறினாா்.