வரும் ஜன. 21ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தடையை மீறி கள் இறக்கி விற்பனை செய்வோம் என்றாா் கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை மாலை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழக அரசு பனை, தென்னை மரங்களிலிருந்து நீரா பானம், கள் ஆகியவை இறக்குவதற்கும் அதனை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். உலக நாடுகளில் கள்
உணவுப் பொருள் என்று கூறியுள்ளனா். ஆனால் தமிழக அரசியல்வாதிகள் மட்டும் கள்ளை போதைப் பொருள் என்று கூறி வருகின்றனா். தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்கி அதனை கலப்படமில்லாமல் விற்பனை செய்தால் எந்த விதமான தீங்கும் ஏற்படாது. ஆனால் தமிழக அரசிற்கு கலப்படமில்லாமல் அதனை விற்பனை செய்வதற்கு முடியவில்லை.
வரும் ஜனவரி மாதம் 21ஆம் தேதி முதல் தமிழகத்தில் தடையை மீறி தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்கப்படும் என்றாா் நல்லசாமி.