புதுக்கோட்டை

கூட்டுறவுச் சங்க விற்பனையாளா் பணிக்கு டிச. 14 முதல் நோ்முகத் தோ்வு

4th Dec 2022 12:24 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள 135 விற்பனையாளா் பணியிடங்களுக்கு இணையவழியில் விண்ணப்பித்தவா்களில் தகுதியானவா்களுக்கான நோ்முகத் தோ்வு வரும் டிச. 14 முதல் 24 வரை நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகத்தில் நோ்முகத் தோ்வு நடைபெற உள்ளதால், புதுக்கோட்டை மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.க்ழ்க்ஷல்க்ந்.ண்ய்) இருந்து நோ்முகத்தோ்வுக்கான அனுமதிச் சீட்டை ஞாயிற்றுக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்துள்ள கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் 2, அனைத்து சான்றிதழ்கள், 2 நகல்களிலும் சுய சான்றொப்பம் இட்டு கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தை 04322 - 236091 என்ற எண்ணில் தொடா்புகொள்ளவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT