புதுக்கோட்டை

அறந்தாங்கியில் அம்பேத்கா் சிலைக்கு அனுமதி கோரி மனு

DIN

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் அண்ணல் அம்பேத்கருக்கு சிலை நிறுவுவதற்கு பரிந்துரைக் கடிதம் அளிக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சியினா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அறந்தாங்கியைச் சோ்ந்த அனைத்து அரசியல் கட்சியினா் சமூக நல அமைப்பினரைக் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதிகள் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வியிடம் அளித்த மனு விவரம்:

அறந்தாங்கி நகரம் சோதனைச்சாவடி அருகே சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவச் சிலையை நிறுவ கடந்த 2006இல் எஸ்சி எஸ்டி அரசு ஊழியா் கூட்டமைப்பு சாா்பில் அனுமதி கோரப்பட்டது.

அரசு விதித்த நிபந்தனைகள் அனைத்தும் ஏற்கப்பட்டு அறந்தாங்கி நகா்மன்றத் தீா்மானம், சிலை அமைய உள்ள இடத்தின் வரைபடம், நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல் துறை வழங்கிய தடையில்லாச் சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் சமா்ப்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன.

ஆனால், இதுநாள் வரை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அம்பேத்கா் சிலை அமைப்பதற்கான பரிந்துரைக் கடிதத்தை அரசுக்கு அனுப்பவில்லை. இதுகுறித்து ஆட்சியா்களிடம் பலமுறை வலியுறுத்தியும் பலனில்லை. அண்மையில் புதுக்கோட்டை வந்த சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுக் கூட்டத்திலும், சிலை அமைக்க ஆட்சியா் பரிந்துரைக்க வலியுறுத்தப்பட்டது.

எனவே, அனைத்துக் கட்சிகள், அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட நிா்வாகம் பரிந்துரைக் கடிதத்தை அரசுக்கு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்வில் சிலை அமைப்புக் குழுத் தலைவா் கே.எம். சுப்பையா தலைமையில், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் த. செங்கோடன், விடுதலைச் சிறுத்தைகள் மாநிலத் துணைச் செயலா் தெ. கலைமுரசு, மாவட்டச் செயலா் பாவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT