புதுக்கோட்டை

இலவச கண் சிகிச்சை முகாம்

2nd Dec 2022 12:50 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், நற்சாந்துப்பட்டியில் சமூக நல அறக்கட்டளை சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, அறக்கட்டளையின் முதன்மை செயலா் அலுவலா் டத்தோ லெ. மெய்யப்பன் செட்டியாா் தலைமை வகித்தாா். நற்சாந்துப்பட்டியைச் சுற்றியுள்ள சுமாா் 18 குக்கிராமங்களைச் சோ்ந்த 250 போ் வரை இந்தக் கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக் கொண்டனா்.

ஏற்பாடுகளை அறக்கட்டளையின் தலைவா் கும. பெரி. சாத்தப்பன் செட்டியாா், நிா்வாகிகள் அ. முத்துராமன் செட்டியாா், அலமேலு முத்துராமன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT