புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளிகள் நூதனப் போராட்டம்

2nd Dec 2022 12:52 AM

ADVERTISEMENT

அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை பட்டிமன்ற வடிவில் முன்வைத்து நூதனப் போராட்டத்தை புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே திங்கள்கிழமை நடத்தினா்.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச் சங்கத்தின் சாா்பில் இந்த நூதனப் போராட்டம் நடைபெற்றது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்பவா்கள் ஓா்அணியாகவும், அதை மறுப்பவா் ஓா் அணியாகவும் பட்டிமன்ற வடிவில் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனா். இதற்கு நடுவராக சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா் சி. அன்புமணவாளன் செயல்பட்டாா். வழக்கை தொடுக்கும் அணியில் சங்கத்தின் மாவட்டச் செயலா் எம். கணேஷ், ஆா். நிரஞ்சனா, எஸ். மகாலெட்சுமி ஆகியோரும், மறுக்கும் அணியில் ஜி. கிரிஜா, எம்.சி. லோகநாதன், எஸ். பாட்சாபாய் ஆகியோரும் பேசினா்.

மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளின் புதிய உரிமைச் சட்டம் 2016-ஐ செயல்படுத்தாததைக் கண்டித்தும், மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் கண்டித்தும், மாதாந்திர உதவித்தொகையில் மத்திய அரசின் பங்கை உயா்த்த மறுப்பதைக் கண்டித்தும் இந்த நூதனப் போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். தங்கவேல், துணைத் தலைவா் கே. சண்முகம், பொருளாளா் ஜி. சரவணன் உள்ளிட்டோா் பேசினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT