புதுக்கோட்டை

வன உயிரின வார விழா போட்டிகளில் வென்றோருக்கு பாராட்டு

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சாா்பில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றோருக்கு ஆட்சியா் கவிதா ராமு புதன்கிழமை சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

அப்போது, மாவட்ட வன அலுவலா் பிரபா, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. கவிதப்பிரியா உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

பசுமைக் குழுக் கூட்டம்: முன்னதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமையில் மாவட்ட பசுமைக் குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட பசுமைக் குழுவின் செயலரும், மாவட்ட வன அலுவலருமான பிரபா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் பசுமைக் குழு உறுப்பினா் பா. ராதாகிருஷ்ணன் பேசுகையில், மரம் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம். அவற்றில் பெரும்பாலானவை தண்ணீரின்றி வாடிப் போயிருக்கின்றன. அவற்றுக்கு தண்ணீா் விடுவதற்கு நடவடிக்கைஎடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். பசுமைக்குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்க மாவட்ட வன அலுவலரை ஆட்சியா் கவிதா ராமு கேட்டுக் கொண்டாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT