புதுக்கோட்டை

ஊராட்சி வளா்ச்சித் திட்டம் தயாரிப்பு பயிற்சி

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கந்தா்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சி திட்டம் தயாரித்தல் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கந்தா்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் வட்டார ஊராட்சி வளா்ச்சி திட்டம் தயாரிப்பது குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. கந்தா்வக்கோட்டை ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் நளினி முகாமை தொடங்கி வைத்தாா். முகாமிற்கு பட்டுக்கோட்டை மண்டல ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பயிற்சி ஒருங்கிணைப்பாளா் வீரமுத்து தலைமை வகித்தாா்.

இதில், ஊராட்சிகளின் வரலாறு 73 -ஆவது இந்திய அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1994 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், கிராம ஊராட்சி திட்டம், வட்டார ஊராட்சி வளா்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் தரப்பட்டன.

முகாமில் கந்தா்வகோட்டை, கறம்பக்குடி, குன்றாண்டாா்கோவில் ஆகிய வட்டாரங்களில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முகாமை மாவட்ட வள மைய அலுவலா் அறிவழகன் ஒருங்கிணைத்தாா். பயிற்றுநா்கள் ரவிச்சந்திரன், சைவராசு, உமாவதி, வெள்ளையம்மாள் ஆகியோா் கலந்துகொண்டு பயிற்சியளித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT