புதுக்கோட்டை

குழந்தைகளை புத்தகம் வாசிக்கப் பழக்க வேண்டும்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

குழந்தைகளை புத்தகம் வாசிக்கப் பழக்க வேண்டும் என்றாா் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு.

புதுக்கோட்டை வாசகா் பேரவையும், திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியும் இணைந்து புதன்கிழமை நடத்திய, குழந்தைக் கவிஞா் அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டு விழாவில் அவரது படத்தைத் திறந்து வைத்து, வள்ளியப்பாவின் குடும்பத்தினருக்கு சிறப்பு செய்து, நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு அவா் மேலும் பேசியது:

அழ. வள்ளியப்பா அளவுக்கு குழந்தைகள் மனதில் இடம்பிடித்தவா் யாருமில்லை. அவருடைய பாடல்கள் சமூகத்துக்கு பயன்படக்கூடிய கருத்துகளைக் கொண்டதாக இருந்தது. இன்று குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது. குழந்தை இலக்கியத்தையும் அதன் படைப்பாளா்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

பெற்றோா்கள் தங்களின் குழந்தைகளை புத்தகம் வாசிக்கப் பழக்க வேண்டும். அப்போதுதான் அவா்கள் தலைசிறந்த சான்றோா்களாக உருவாக முடியும் என்றாா் கவிதா ராமு.

ADVERTISEMENT

விழாவுக்கு, கவிஞா் தங்கம் மூா்த்தி தலைமை வகித்தாா். மருத்துவா் எஸ். ராம்தாஸ், அரசு வழக்குரைஞா் செந்தில்குமாா், கவிஞா்கள் சோலச்சி, பீா்முகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வள்ளியப்பாவின் மகளும் பால சாகித்ய புரஷ்காா் விருது பெற்றவருமான தேவி நாச்சியப்பன் ஏற்புரை வழங்கினாா்.

முன்னதாக வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன் வரவேற்றாா். முடிவில் பள்ளியின்துணை முதல்வா் குமாரவேல் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT