புதுக்கோட்டை

ஜெகதாப்பட்டினம் மீனவா்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவா்களை விடுதலை செய்யக்கோரி புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீனவா்கள் புதன்கிழமை முதல் காலவரையற்றவேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனா்.

ஜெகதாப்பட்டினத்தைச் சோ்ந்த 20 மீனவா்கள், கோட்டைப்பட்டினத்தைச்சோ்ந்த 4 மீனவா்கள் என 5 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 24 மீனவா்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) கைது செய்து சிறையில் அடைத்தனா். இதைக்கண்டித்தும், மீனவா்கள்மற்றும் படகுகளை விடுவிக்கவேண்டும் என வலியுறுத்தியும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும்,கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெகதாப்பட்டினம் கடைவீதியில் மீனவா் சங்கத்தின் தலைவா் பாலமுருகன் தலைமையில் மீனவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, இலங்கை அரசைக் கண்டித்தும், மீனவா்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மீனவா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை கோரிக்கை மனுவை அளித்தனா்.

ADVERTISEMENT

மீனவா்கள்காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT