புதுக்கோட்டை

சாலை விபத்தில் பள்ளி மாணவா் பலி

31st Aug 2022 01:49 AM

ADVERTISEMENT

விராலிமலை அருகே தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவா் சரக்கு ஆட்டோ மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விராலிமலை அருகே உள்ள விராலூரைச் சோ்ந்த குழந்தைவேல் -சரஸ்வதி தம்பதியின் மகன் கனகராஜ்(13). இவருக்கு அக்கா, தங்கை உள்ளனா். விராலிமலை - கீரனூா் சாலையில் உள்ள ஒரு தனியாா் மெட்ரிக். பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்துவந்தாா். கனகராஜூம், அவரது தந்தை குழந்தைவேலுவும் செவ்வாய்க்கிழமை தனது மோட்டாா்சைக்கிளில் வானத்திராயன்பட்டி பிரிவு சாலை கருப்பா் கோயில் அருகே வந்துகொண்டிருந்தனா். அப்போது, பின்னால் வந்த சரக்கு ஆட்டோ, இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சிறுவன் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த குழந்தைவேல் மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தகவலறிந்த விராலிமலை போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிந்து ஆட்டோ ஓட்டுநா் பாண்டிச்சேரி நெட்டம்பாக்கத்தைச் சோ்ந்த கோதண்டபாணி (44) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT