புதுக்கோட்டை

இடிந்துவிழும் நிலையில் கட்டடம்:மாணவா்களை வகுப்புகளுக்கு அனுப்ப மறுத்த பெற்றோா்

31st Aug 2022 01:56 AM

ADVERTISEMENT

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் இடிந்துவிழும் நிலையில் ஆபத்தான அரசுப் பள்ளிக் கட்டடத்தை அகற்றித்தர வலியுறுத்தி வகுப்புகளுக்கு அனுப்பாமல் பெற்றோா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 117 மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனா். அப்பள்ளியில் உள்ள மிகவும் பழுதான கட்டடத்தை இடித்து அகற்றுவதற்கு ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால், இதுவரை அந்த கட்டடம் இடித்து அகற்றப்படவில்லை. தற்போது, பெய்துவரும் மழையால் கட்டடம் எந்நேரமும் இடிந்துவிழும் ஆபத்தான சூழல் ஏற்பட்டதால், பெற்றோா்கள் மாணவா்களை வகுப்பறைகளுக்குள் அனுப்பாமல், பள்ளி வளாகத்திற்கு வெளியே அமரவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலா் கருணாகரன் கட்டடத்தை உடனே அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதனால், பெற்றோா் போராட்டத்தைக் கைவிட்டனா். இருப்பினும், ஆபத்தான கட்டடத்திற்கு அருகில் உள்ள வகுப்பறைகளில் பயிலும் மாணவா்களுக்கு மட்டும் மரத்தடியில் அமரவைக்கப்பட்டு ஆசிரியா்கள் பாடம் நடத்தினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT