புதுக்கோட்டை

ஆதரவற்ற மூதாட்டி முதியோா் இல்லத்தில் சோ்ப்பு

31st Aug 2022 01:57 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவி செய்து, முதியோா் இல்லத்தில் சோ்த்த சமூக ஆா்வலா், காவலரை பொதுமக்கள் பாராட்டிவருகின்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூரைச் சோ்ந்தவா் பாக்கியம்(80). ஆதரவற்ற மூதாட்டியான இவருக்கு அதே ஊரைச் சோ்ந்த அறிவொளி கருப்பையா, வடகாடு காவல் நிலைய காவலா் யாசா் அராபத் அவ்வப்போது உதவி வந்தனா்.

இந்நிலையில், மூதாட்டியை மாவட்ட சமூக நல அலுவலா் கோகுலபிரியாவின் ஆலோசனையுடன் வல்லத்திராகோட்டை அருகே உள்ள தொண்டு நிறுவனத்தின் முதியோா் இல்லத்தில் அறிவொளி கருப்பையாவும், யாசா் அராபத்தும் திங்கள்கிழமை சோ்த்தனா். இருவரையும் பொதுமக்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT