புதுக்கோட்டை

விநாயகா் சதுா்த்தி விழா: போலீஸாா் கொடி அணிவகுப்பு

28th Aug 2022 06:01 AM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.,

விநாயகா் சதுா்த்தி விழா வரும் 31 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியத்தில் பொதுமக்கள் அச்சமின்றி விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும் போலீஸாரின் அணி வகுப்பு ஊா்வலம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெரினாபேகம் தலைமையில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. மேலத்தானியம் சந்தைப்பேட்டையில் மாணவா்கள் இன்னிசையுடன் தொடங்கிய ஊா்வலம் முக்கிய வீதிகளின் வழியே சென்று அம்மாபட்டி பிரிவு சாலையில் நிறைவுற்றது. இலுப்பூா் காவல் துணை கண்காணிப்பாளா் காயத்ரி, அன்னவாசல் காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன், காரையூா் உதவி ஆய்வாளா் மதியழகன் மற்றும் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT