புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே விசிகவினா் சாலை மறியல்

28th Aug 2022 06:01 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பதாகை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி அருகே புதுவலசல் கிராமத்தில் அம்பேத்கா் படத்துடன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் தனியாகவும், ஒரு அமைப்பின் சாா்பில் தனியாகவும் என 2 பதாகை வைக்கப்பட்டிருந்தன.

இந்தப்பதாகைகளை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை இரவு சேதப்படுத்தியுள்ளனா். இதைக் கண்டித்தும், சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலா் செல்வரத்தினம் தலைமையில் புதுப்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் தீபக் ரஜினி பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். இதனால், ஆலங்குடி- கறம்பக்குடி சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT