புதுக்கோட்டை

இரு சக்கர வாகனத்தில் இருந்துரூ. 1.37 லட்சம் திருட்டு

28th Aug 2022 06:00 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டையில் உள்ள தனியாா் ஜவுளிக் கடையில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஜவுளி எடுக்கச் சென்ற பெண்ணின் இரு சக்கர வாகனத்தில் இருந்து ரூ. 1.37 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மூன்று மா்ம நபா்களை சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுக்கோட்டை தமிழ் நகரைச் சோ்ந்த சுதா என்ற பெண் தனது கணவா் செபஸ்டினுடன் கீழ ராஜவீதியில் உள்ள வங்கியில் ரூ. 1.50 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு, வடக்கு ராஜ வீதியில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்கு துணி வாங்கச் சென்றுள்ளாா். அப்போது ஜவுளி கடையின் கீழ் தளத்தில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் ரூ. 1.37 லட்சத்தை வைத்துவிட்டு மாடிக்குச் சென்றுள்ளாா். பின்னா் அவா் வந்து பாா்த்தபோது அவரது வாகனத்தில் இருந்த பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் சுதா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அந்த தனியாா் ஜவுளி கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைப் பாா்த்தபோது, இரு நபா்கள் அந்த வாகனத்தின் டிக்கியைத் திறந்து பணத்தை எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஏறிச் செல்வதுபதிவாகியிருந்தது. இந்தக் காட்சிகளைக் கொண்டு மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT