புதுக்கோட்டை

விநாயகா் சதுா்த்தி விழா ஆய்வுக் கூட்டம்

27th Aug 2022 04:04 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் விநாயகா் சதுா்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு பேசியது: விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி சுற்றுச்சூழலைப் பாதிக்காத, களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை, நீரில் கரையும் வண்ணம் பூசப்பட்ட சிலைகளை வைத்து வழிபட வேண்டும். உரிய தடையின்மைச் சான்றுகளைக் கொடுத்து முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்கு அனுமதி கிடையாது. பெட்டி வடிவ ஒலிபெருக்கியை காவல் துறையினரின் அனுமதி பெற்று பயன்படுத்தலாம். ஒவ்வோா் இடத்திலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் 2 தன்னாா்வலா்களை நியமித்து சிலை பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்துள்ள விதிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். காவல்துறையினா் அனுமதிக்கும் வழியில் மட்டுமே ஊா்வலம் நடத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் மட்டுமே சிலைகளைக் கரைக்க வேண்டும். பிற மதத்தினரைப் பாதிக்கும் வகையில் முழக்கங்களை எழுப்பக் கூடாது என்றாா் கவிதா ராமு.

ADVERTISEMENT

கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) து. தங்கவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT