மாநில அளவில் முதியோா்களுக்கான அரசின் உயா்நிலை ஆலோசனை குழுவுக்கான அலுவல் சாரா உறுப்பினா் பதவியிடங்களுக்கு தகுதியுடைய மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்பு விடுத்துள்ளாா்.
முதியோா் நல மேம்பாட்டுப் பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவமும், முழு ஈடுபாடும் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோா் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட ஆட்சியரக வளாகம், புதுக்கோட்டை- 622 005.தொடா்பு எண்- 04322 - 222270
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி- ஆக. 30.