புதுக்கோட்டை சந்தைபேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அரசின் 147 விலையில்லா சைக்கிள்களை மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கினாா் எம்எல்ஏ வை. முத்துராஜா.
நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன், மாவட்டக் கல்வி அளுவலா் மா. மஞ்சுளா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா். பள்ளி தலைமை ஆசிரியா் ச. சுசரிதா நன்றி கூறினாா்.