புதுக்கோட்டை

கடைகளில் புகையிலை விற்ற 2 போ் கைது

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகே கடைகளில் புகையிலை பொருள்கள் விற்ற 2 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

காரையூா் பகுதியில் உள்ள கடைகளில் ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் காரையூா் காவல் உதவி ஆய்வாளா் மதியழகன் தலைமையிலான போலீசாா் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, காரையூா் மாரியம்மன் கோயில் தெருவில் க.சின்னையா து. முருகப்பன் ஆகியோருக்குச் சொந்தமான கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமாா் 72 கிலோ ஹான்ஸ் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்தனா். மேலும், போலீஸாா் வழக்கு பதிவு செய்து சின்னையா, முருகப்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT