புதுக்கோட்டை

அரிமளம் அருகே மாட்டு வண்டி பந்தயம்

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தில் 74 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி வேணுகோபால்சாமி கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடத்தப்பட்டது.

இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 74 மாட்டுவண்டிகள் பங்கேற்றன.

முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் பந்தய தொலைவு 8 மைல் தொலைவாக நிா்ணயிக்கப்பட்ட நிலையில் 10 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை அம்மன் பேட்டை சகாயராணி, 2ஆம் பரிசை கே. புதுப்பட்டி கே.எ.அம்பாள், 3ஆம் பரிசை தஞ்சை பூக்கொல்லை ரித்தீஸ்வரன், 4ஆம் பரிசை சிங்கவனம் ஜமீன் ராஜா ஆகியோருக்குச் சொந்தமான மாடுகள் வென்றன.

ADVERTISEMENT

நடுத்தர மாடு பிரிவில் 24 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதன் பந்தயத் தொலைவு 6 மைல் தொலைவாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

இதில் முதல் பரிசை கழுகுமலை பெரிய தம்பி, 2ஆம் பரிசை கே.புதுப்பட்டி கே.ஏ .அம்பாள், 3ஆம் பரிசை மாவூா் ராமச்சந்திரன், 4ஆம் பரிசை வெள்ளனூா் நரேஷ் ஆகியோருக்குச் சொந்தமான மாடுகள் வென்றன.

இறுதியாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 40 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் பந்தயம் 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதன் பந்தயத் தொலைவு போய் வர 5 மைல் தொலைவாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை நெய்வாசல் பெரியசாமி, பூந்தோட்டம் ஐயப்பன், 2ஆம் பரிசை அரிமளம் சேத்து மேல் செல்ல அய்யனாா், சொக்கலிங்கம் புதூா் சக்தி, 3ஆம் பரிசு ஓனாங்குடி பொன்னழகி அம்மன், துறையூா் வசந்த், 4ஆம் பரிசை கே.புதுப்பட்டி கரைமேல் அய்யனாா், நாட்டாணி சூரியா ஆகியோருக்குச் சொந்தமான மாடுகள் வென்றன. தொடா்ந்து, வெற்றிபெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT