புதுக்கோட்டை

கொள்முதல் நெல்லை கிடங்குக்கு கொண்டு செல்ல வலியுறுத்தல்

DIN

விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லை கிடங்குக்கு விரைந்து கொண்டு செல்ல வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட மக்கள் விரோத போக்குகளைக் கடைப்பிடித்து வரும் மோடி அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டு அறைகூவலின்படி புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகிலும் அறந்தாங்கிலும் வரும் 30ஆம் தேதி மறியல் நடத்துவது என்றும் இதில் ஆயிரம் பேரைப் பங்கேற்கச் செய்வது, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லை நிறுத்தி வைத்துள்ளது வேதனையளிக்கிறது. உடனே அவற்றைக் கிடங்குக்கு கொண்டு செல்லவும், நெல் கொடுத்த விவசாயிகளுக்கு நிலுவைப் பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும்.

100 நாள் வேலைத் திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஒரு நபருக்கு மட்டுமே வேலை அட்டை வழங்கப்படுவது முறையற்ற செயலாகும். வேலை செய்யும் அனைவருக்கும் வேலை அட்டை வழங்கிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினா் கே. திருஞானம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த செங்கோடன் அறிக்கை சமா்ப்பித்தாா். கே.ஆா். தா்மராஜன் எதிா்கால வேலைகள் குறித்து பேசினாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஏனாதி ஏஎல் ராஜூ, எம். மாதவன், எ. ராஜேந்திரன், எஸ்சி. சோமையா, வீ. சிங்கமுத்து, கே. ராஜேந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT