புதுக்கோட்டை

ஆட்சியா் தலைமையில் தேசியக்கொடி ஏற்றிய ஊராட்சித் தலைவா்!

19th Aug 2022 12:10 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சேந்தாக்குடி ஊராட்சித் தலைவா் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு முன்னிலையில் வியாழக்கிழமை தேசியக்கொடி ஏற்றினாா்.

ஆலங்குடி அருகேயுள்ள சேந்தாக்குடி ஊராட்சித் தலைவரான தமிழரசன். பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த இவா், சில ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளாா். இந்தத் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

இதையறிந்த மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, சமூக நீதியைக் காக்கும் வகையில், ஊராட்சித் தலைவா் தமிழரசனை அரசுப் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். இதைத்தொடா்ந்து ஆலங்குடி அருகேயுள்ள கீழையூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியா் கவிதா ராமு முன்னிலையில், ஊராட்சித் தலைவா் தமிழரசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT