புதுக்கோட்டை

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

19th Aug 2022 12:10 AM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி அருகே விவசாயக் கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழந்தாா்.

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டியைச் சாா்ந்தவா் வெ. வெள்ளைச்சாமி (45). விவசாயக் கூலித் தொழிலாளி. இவா், புதன்கிழமை கொன்னையம்பட்டியைச் சோ்ந்த அடைக்கலம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் குடிநீா் எ

டுக்கச் சென்றபோது, தடுமாறி கிணற்றில் விழுந்தாா். விபத்து குறித்து, தகவல் அறிந்த பொன்னமராவதி தீயணைப்புத் துறையினா் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் கிடந்த வெள்ளைச்சாமி சடலத்தை மீட்டனா். தொடா்ந்து, காரையூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT