புதுக்கோட்டை

மாதா் சங்கத்தினா் கையெழுத்து இயக்கம்

19th Aug 2022 12:11 AM

ADVERTISEMENT

 

பொன்னமராவதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் சாா்பில் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கையெழுத்து இயக்கத்திற்கு மாதா் சங்க ஒன்றியச் செயலா் ஆா். மதியரசி தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் டி. சலோமி, ஒன்றிய நிா்வாகிகள் தலைவா் ரேவதி, சித்ரா, லதா, சிபிஎம் ஒன்றியச் செயலா் என். பக்ருதீன், ஒன்றியக் குழு உறுப்பினா் கே. குமாா், தமிழ்நாடு விவசாய சங்க நிா்வாகிகள் ராமசாமி, பாண்டியன் ஆகியோா் பங்கேற்றனா். கையெழுத்து இயக்கத்தில் குடியரசு தலைவருக்கு கோரிக்கை மனு தயாா் செய்யப்பட்டு பொதுமக்களிடத்தில் கையெழுத்து பெறப்பட்டது. இதில், ஒருங்கிணைந்த பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், உணவு பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்திட வேண்டும், விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், சமையல் எரிவாயு சிலிண்டா் விலையைக் குறைக்க வேண்டும்,

பொது விநியோகத் திட்டத்தில் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT